ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா நிறுவனம் இணைவதால், செப்டம்பர் 3 முதல் நவம்பர் 11-ஆம் நள்ளிரவு 11.59 மணிவரை முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்பின்னர், விஸ்தாரா நிறுவனங்கள் அனைத்தும் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் என்றும், இதையொட்டி, அந்நிறுவன இணையதளம் அல்லது கைப்பேசி ஆப் வாயிலாக பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.