சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை - காரணம் என்ன?
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பாலான வேலையில்லாத சீன இளைஞர்களை சமூக ஊடகங்கள்  அழுகிய வால் குழந்தைகள் என்று புதுப் பெயரிட்டு அழைக்கின்றன. சீனாவில் வேலையின்மை அதிகரிப்பிற்கு என்ன காரணம்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…

2021ம் ஆண்டிலிருந்து சீனாவின் பொருளாதாரத்தை பாதித்த பல்லாயிரக்கணக்கான கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு “அழுகிய வால் கட்டிடங்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதே போல் இப்போது ஏராளமான சீன இளைஞர்கள் வேலையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்/ எனவே அவர்கள் அழுகிய வால் குழந்தைகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

கொரொனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, நாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்த்திருந்த சீன இளைஞர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

இந்த ஆண்டு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை என்கின்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதன்முறையாக 16-24 வயதுடைய சுமார் 100 மில்லியன் சீன இளைஞர்களின் வேலையின்மை 20 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்தது. 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 21.3 சதவீதத்தைத் தாண்டி வளர்ந்தது.

தொடரும் இந்த மோசமான சூழ்நிலையில் சீன இளைஞர்களுக்கு வேலையின்மை ஒரு பெரும் தலைவலியாகவே உள்ளது.

இந்த ஜூலை மாதத்தில்  11.79 மில்லியன் சீன கல்லூரி மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குச் செல்ல காத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டின் வேலையின்மை சுமார் 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ரியல் எஸ்டேட் நெருக்கடியால் சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் சொல்லப் படுகிறது.

வேலை கிடைக்காத சீன இளைஞர்களில் பலர் தங்கள் பெற்றோரின் ஓய்வூதியம் மற்றும் சேமிப்பை நம்பி வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கல்வி பயில பல ஆண்டுகளைச் செலவழித்து முதுகலை பட்டம் பெற்ற நிலையிலும் சீன இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக இருக்கிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்று கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அதற்கான திட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கிய போதிலும் வேலையின்மை  அதிகரித்து வருகிறது .

1999 ஆம் ஆண்டில், சீனா தனது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த படித்த ஊழியர்களை உருவாக்க நினைத்தது. பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் சேர்க்கை அளவை கூட்டியது.

ஆனால் சீன அரசு, பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கோட்டைவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவில் புதிய கல்லூரி பட்டதாரிகளின் எண்ணிக்கை சுமார் 18 மில்லியனாக கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவநம்பிக்கையில் இருக்கும் வேலை தேடும் இளம் சீன இளைஞர்கள், மோசடி மற்றும் குற்றச் செயல்களில் திசை மாறவும் வாய்ப்பிருப்பதாக சமூக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

Tags: chinaunemployedcorona lockdownchina youths
ShareTweetSendShare
Previous Post

பாரிஸ் பாரா ஒலிம்பிக் – மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் T-35 பிரிவில் பிரீத்தி பால் வெண்கலம் வென்று அசத்தல்!

Next Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies