தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள டாக் தொழிற்சாலையின் அமோனியா பிளாண்டில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மஞ்சள் நீர்காயல் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் உயிரிழந்தார்.மேலும் விபத்தில் படுகாயமடைந்த மேலும் 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.