இந்தி பிரசார சபை வாயிலாக இந்தி பாடத்தேர்வை எழுதியதில் தென் மாநிலங்களிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது.
மத்திய அரசு இந்தியை அலுவல் மொழியாகவும், ஆங்கிலத்தை கூடுதல் அலுவல் மொழியாகவும் அங்கீகரித்துள்ளது. இந்தி மொழியில் கைத்தேர்ந்தவர்களை உருவாக்க பிரசார சபை சார்பில் ஆண்டுதோறும் 2 முறை தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து 4 லட்சத்து 73 ஆயிரத்து 650 பேர் இந்தி மொழி கற்று அதற்கான தேர்வை எழுதியுள்ளனர்.
இதில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 655 பேர் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இந்தி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 3 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.