வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். வயநாடு மக்களுக்கு பலரும் நிவாரண உதவி செய்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பெரம்பூர் கிராமத்தில் இருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் போர்வை உள்ளிட்டவை வாகன மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் மூலம் 400 குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.