ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாலக்காட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதன்முறையாக கேரளாவில் நடைபெறும் மாநாட்டில், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்திற்காக உழைக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தேசிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, ஆர்எஸ்எஸ் ஆல் ஈர்க்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் தங்களின் பணி குறித்த தகவல்களையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வார்கள்.
இந்தக் கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலையில் தேசிய நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள், சமீபத்திய முக்கிய நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து திட்டமிடுவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத், சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு கூட்டத்தின் இறுதியில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.