கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இன்று ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஜெ.பி.நட்டா, கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது பாஜவினர் இணைந்து மலர்தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். , பாஜக தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பேராசிரியர் கனகசபாபதி, ஏ.பி.முருகானந்தம் ஆகியோரும் இருந்தனர். அதனைத்தொடர்ந்து கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஜெ.பி.நட்டா பாலக்காடு சென்றார்.