விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
சிவகாசியை சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ணவேணி, பழனிச்சாமி என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து கிருஷ்ணவேணியின் உறவினர்கள் இருவரையும் காரில் கடத்திச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் காரை மடக்கிப் பிடித்த போலீசார் பெண்ணின் உறவினர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.