நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் பசி, பட்டினி அதிகரித்துள்ள நிலையில்,பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை கொல்ல நமீபியா அரசு முடிவு செய்து இருக்கிறது.