அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
நியூயார்க்கில் நடபெற்று வரும் இந்த போட்டியின் ஆண்கள் பிரிவினருக்கான 2-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்து வீரர் போடிக் வான் டி ஜாண்ட்ஸ்கல்ப் உடன் மோதினர்.
இரண்டு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் அல்காரஸ் 1-6, 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ச்சியாக 15 போட்டியில் வெற்றி பெற்ற அல்காரசின் வெற்றிநடை முடிவுக்கு வந்தது.