செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி சுவற்றில் வரையப்பட்டுள்ள ரயில் போன்ற ஓவியம் மாணவர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பள்ளியின் அனைத்து சுவர்களிலும் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மேலும், பள்ளி வகுப்பறைகளின் முன்பகுதி உண்மையான ரயில் போலவும், மாணவர்கள் ரயிலுக்குள் ஏறுவது போலவும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதேபோல வகுப்பறைக்குள்ளும் மாணவர்களுக்கு பல பொதுவான விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான படங்கள் இடம்பெற்றுள்ளன. இது மாணவர்களிடையே பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.