அரபிக்கடலில் உருவான அஸ்னா புயலையொட்டி கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கட்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘அஸ்னா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்பதால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.