கோவை மாவட்டம், சிக்காரம்பாளையம் அரசுப்பள்ளி மாணவிகளை ஊராட்சி தலைவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற சம்பவம நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்காரம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தனது சொந்த செலவில் 55 மாணவிகளை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார்.
இதையடுத்து அனைவரும் மெட்ரோ ரயில் மூலம் அண்ணா நூலகத்தை பார்வையிட்டனர். அப்போது பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.