திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆடாலூரை சேர்ந்த கருப்பாயி என்ற பெண்ணை புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை பலமாக தாக்கியது. இதில் கருப்பாயி உயிரிழந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.