சுயலாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது என நடிகையும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆந்திராவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது என கூறினார்.
கிருஷ்ணா மாவட்டம் குட்லவெல்லூரில் கல்லூரியில் உள்ள பெண்கள் ஹாஸ்டல் கழிவறையில் சிசிடிவி கேமராவை பொருத்திய நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் ரோஜா தெரிவித்தார்.