இளைய தலைமுறையினரை சுண்டியிழுக்கும் இசையை வழங்குவதில் இளவரசனாக போற்றப்படுகிறார் யுவன் சங்கர் ராஜா. அவரது இசைப்பயணம் பற்றி தற்போது பார்ப்போம்.
காதலின் பிரிவு, சோகம், நிராசை, தவிப்பு, ஏக்கம், புலம்பல், ஆறுதல்ன்னு எல்லாத்துக்குமே ஒரு வைத்தியம் இருக்கும். தன்னோட அதி இளமையான இசையால் கட்டி போட்டு வெச்சிருக்க ராஜா தான் யுவன்
பொதுவாவே பிரபலங்களோட வாரிசுகளுக்கு ஒரு சுமை இருந்துட்டே இருக்கும் தன்னோட அப்பாவோ இல்ல அம்மாவோ போல கொடி கட்டி பறக்க முடியுமா? ஒரு வேளை நான் செய்ற வேஐயை பாத்திட்டு மக்கள் கமெண்ட் பன்னிடுவாங்களோன்ற திங்கிங் இருந்துகிட்டே இருக்கும்
அந்த சுமை யுவனுக்கு இருந்தது. யுவன் அரவிந்த் என்ற படத்திற்கு இசை அமைக்கும் பொழுது ஒரு பக்கம் தனக்கு போட்டிய தன்னோட அப்பாவான இளையாராஜாவும், இன்னொரு பக்கம் ஏ.ஆர் ரஹ்மான்ற இசையமைப்பாளர் பேரரசனுக்குரிய அடையாளங்கள போட்டு கிட்டு இருந்தாரு. இருந்தாலும் அந்த போட்டியிலும் தனி அடையாளத்த புடிச்சிகிட்டாரு யுவன்
எப்படியும் யுவன் பத்தி எல்லாத்துக்கும் தெரிியும் அதனால நான் கவிதையா அடுகிட்டு போக விரும்பல காதல், காதல் தோல்வி, குத்து, பிஜிஎம்ன்னு யுவனுடைய ஐகானிக் மட்டும் பாப்போம்.
காதல் தோல்விய பொருத்தவர யுவனுக்கு கை வந்த கலை. அடிச்சி தூள் கிளப்பிடுவாறு. யுவனோட காதல் தோல்வி பாடல்களை மனசுல பதிச்சு வெச்சிக்கலாம்.
என்றைக்கும் வித்தியாசமான இசையை கொடுக்கிறதுலருந்து யுவன் தவறுனதே இல்ல. நவீன இசையமைப்பாளர்களில் அசலான கிராமிய இசையை தர முடியுமா என்ற கேள்விக்கு அசால்ட்டா பதில் சொன்னாரு யுவன்.
மொத்தத்தில் தந்தை எட்டு அடி பாய்ந்தா மகன் 16 அடி பாய்ஞ்சிட்டாரு. இசையை ரசிக்க இசைக்கே கற்றுக்கொடுத்த சின்ன ஞானி மனுஷனை மயக்கும் இசை நட்சத்திரம் U1