இந்தியா மட்டுமன்றி உலகின்பல்வேறு நாடுகளுக்கும் சீனாவுடன் பகை நீடிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், சீனாவுடன் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் பிரச்னை இருப்பதாக தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அவர்கள் பொருளாதார ரீதியாகவும், தேசத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் சந்திக்கும் பிரச்னைகளைக் கேட்டால், பதில் சீனாவாகத்தான் இருக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இதேபோல அமெரிக்காவும் பல்வேறு வழிகளில் சீனா மீது கோபத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.