முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி பற்றி அவதூறு பாடல் ஒன்றை பாடினார்.
இது தொடர்பாக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஷ் என்பவர் மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து எஸ்.சி. எஸ்.டி. ஆணையம், சீமான் மீது நடவடிக்கை எடுக்க பட்டாபிராம் போலீசுக்கு உத்தரவிட்டது.
இதன்படி சீமான் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி. எஸ்.டி. சட்டப் பிரிவுடன் சேர்ந்து 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.