அமெரிக்காவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கலிஃபோர்னியா மாகாணத்தில், பண்ணையில் அடைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.
அமெரிக்காவில் 14-ஆவது மாகாணமாக கலிஃபோர்னியாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த மார்ச் முதல் 190 மாடுகளும், 13 பண்ணைத் தொழிலாளர்களும் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானதாக அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.