உதகை அருகே யானைகளுக்கு உணவு அளித்து வேடிக்கை காட்டிய விவகாரத்தில் தனியார் தங்கும் விடுதியை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உதகை அருகே மசினகுடி அடுத்துள்ள ஆச்சக்கரை பகுதியில் காட்டு யானைகளுக்கு அத்துமீறி உணவு அளித்து தனியார் தங்கும் விடுதி ஊழியர்கள் வேடிக்கை காட்டியுள்ளனர். இதனையடுத்து தனியார் தங்கும் விடுதியை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் தங்கும் விடுதி குடியிருப்புக்கான அனுமதி பெற்றுவிட்டு, வணிக ரீதியாக பயன்படுத்தி வருவது தெரிய வந்ததால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த விவகாரத்தில், விடுதி மேலாளர் மற்றும் பணியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.