சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று பிரதான பந்தயங்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய கார் பந்தய பயிற்சி போட்டியில், 200 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் சென்ற கார்களை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். ,
இதனையடுத்து பயிற்சி போட்டிகள் இரவு 10:45 மணிக்கு நிறைவடைந்தன. இந்நிலையில், கார் பந்தயத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று பிரதான பந்தயம் நடைபெறுகிறது.
இதில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயம், ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டி ஆகியவை நடைபெற உள்ளன. பிற்பகலில் தொடங்கும் பிரதான பந்தயங்கள் இரவு 10.30 மணிக்கு நிறைவடைகிறது.