மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்ட கண்டன பேரணி நடைபெற்றது.
கல்லூரி பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து மதுரையில் 500க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் நீதி கேட்பு பேரணியில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக 3 ஆண்டுகளாக உயர்க்கல்வி துறை அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை வைத்தும் பயனில்லை என வேதனை தெரிவித்த ஆசிரியர்கள் தமிழக அரசு, கல்லூரி பேராசிரியர்களை வஞ்சித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூட்டா அமைப்பின் பொது செயலாளர் நாகராஜன், அரசாணை வெளியிட்டபின் அதனை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு, மத்திய அரசை விமர்சிக்க தகுதியில்லை என தெரிவித்தார்.