பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.
மோனா அகர்வால், ப்ரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் அவர் உரையாடினார். வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் , தங்கள் திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளில் அவனி லெக்ராவின் மற்ற முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தினார் .