மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேரள அரசுக்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார்.
பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹேமா கமிட்டி விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதில், கேரள அரசு காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டினார்.
இதில் கேரள அரசுக்கு தடை விதிப்பது யார் என கேள்வி எழுப்பிய ஜெ.பி.நட்டா, இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் கேரள அரசுக்கும் தொடர்பு இருப்பதாக விமர்சித்தார்.
கேரள அரசுடன் தொடர்புடையவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதால், இந்த விவகாரத்தை மாநில அரசு மூடிமறைப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதை ஹேமா கமிட்டி அறிக்கையே வெட்டவெளிச்சமாக குறிப்பிட்டுவிட்டதாகவும் ஜெ.பி.நட்டா கூறினார்.
எனவே இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்க வேண்டும் என ஜே.பி.நட்டா வலியுறுத்தினார்.