ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மூலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் JAYCEES என்ற தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு விடுமுறை அளித்ததோடு, மாணவ மாணவிகளை பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டிலுள்ள பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.