ஆந்திராவில் பெய்த கனமழையால் இருப்பு பாதை பாலம் சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கேசமுத்ரம் மற்றும் இன்டகன்னே இடையிலான ரயில்வே பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் அந்தரத்தில் நின்றது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்படட் நிலையில், பாலத்தில் சீரமைப்பு பணி துரிதமாக நடைபெற்றது.
இதேபோல தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாளையர் நீர்த்தேக்கம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலை துண்டிக்கப்பட்டதால், அங்கு போக்குவரத்து முடங்கியது.
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழையால், பிந்துசாரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.