தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாட்கள் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையொட்டி, செய்தியாளர்களை சந்தித்த சுனில் அம்பேகர், நூற்றாண்டை நிறைவு செய்யும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தேச சேவையே தலையாய நோக்கம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக கூறிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி கிடைக்க சட்டத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்தினார்.
வங்கதேச கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் வேதனை தெரிவித்தார்.
இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், சமூகத்தில் இடஒதுக்கீடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.