ஆவணி மாதம் அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திறக்கப்பட்டது.
முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். அதிகாலையில் சதுரகிரி கோயில் நுழைவு வாயில் திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
நாளை காலை வரை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கயுள்ள நிலையில், நீரோடைகளில் குளிக்கவும், இரவில் மலையில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.