ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாயகம் திரும்பவோ அல்லது தங்களது வசிப்பிட நிலையை உறுதிப்படுத்தவோ வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான அவசரநிலை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை தொடர்ந்து வசிக்க விரும்பினால், வசிப்பிட உரிமையை ஒழுங்குபடுத்த கோரி விண்ணப்பிக்கலாம் என அமீரக அரசு தெரிவித்துள்ளது.
இதையொட்டி, இந்திய தூதரகத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருப்பதாகவும், அமீரக நேரப்படி காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.