சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் எண்ணெய் கசிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஆயில் பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்ற லாரிதளவாய்ப்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆயில் டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நல்வாய்ப்பாக இரண்டு ஓட்டுனர்களும் உயிர் தப்பிய நிலையில், லாரியில் இருந்த ஆயில் பாக்கெட்டுகள் சாலையில் கொட்டியது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.