அரசு முறை பயணமாக பிரதமர் மோடி புருனேவிற்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
இந்தியா – புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி, பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று புருனே புறப்பட்டார். அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு நட்புறவு குறித்து விவாதிக்கிறார்.
பின்னர் நாளை மற்றும் நாளை மறுநாள் சிங்கப்பூர் செல்கிறார். இந்தியா -சிங்கப்பூர் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.