பிரதமர் மோடி தலைமையின் கீழ் பாஜக உறுப்பினராக புதுப்பித்துக் கொண்டதில் பெருமிதம் கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாஜக உறுப்பினராக, புதுப்பித்துக் கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன். அன்பார்ந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையின் மூலம், நமது தேசத்தை மேலும் வலிமையாக்க இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்.
8800002024 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி உறுப்பினராகுங்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.