மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து விளக்குகள் இன்றி இயக்கப்பட்டதால் பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் இயங்கிவரும் பல அரசுப் பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. பல வேளையில் பேருந்துகள் பாதி வழியில் பழுதாகி நிற்பதும், படிகட்டுகள் உடைந்து விழுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை – திருவாரூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து, இரவு வேளையில் விளக்குகள் இல்லாமல் இயக்கப்பட்டது. இதனால் இருள் சூழ்ந்த பேருந்தில்,பெண் பயணிகள் ஒருவித அச்சத்துடன் பயணம் மேற்கொண்டனர்.
போக்குவரத்து துறை அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். வெளிச்சம் இல்லாமல் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.