மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை 59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் அறநிலையத்துறையின் மதுரை மண்டல ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது
கடந்த 2017-ஆம் ஆண்டு வரை, மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டடத்தில், ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்ததையடுத்து, இடப்பற்றாக்குறை காரணமாக பின்னர் எல்லீஸ் நகருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய மண்டல அலுவலகத்தின் வாடகை விபரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தினகரன் என்பவர் கோயில் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
அப்போது, அதற்கு பதில் அளித்துள்ள நிர்வாகம், தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டடத்துக்கு 59 ஆயிரம் ரூபாயும், எல்லீஸ் நகரில் உள்ள மண்டல அலுவலக கட்டடத்திற்கு 59 லட்சத்து 6 ஆயிரத்து 813 ரூபாயும் அறநிலையத்துறை வாடகை பாக்கி வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.