தேனி அருகே குழந்தையை தன்வசம் ஒப்படைக் கோரிய புகார் மனு மீது நடவடிக்கை எடுக்ககோரி மகளிர் காவல் நிலையத்தில் முன்பு இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கூடலூரை சேர்ந்த மனிஷா என்பவருக்கும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த காவலரான உதயகுமார் என்பவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து முதல் குழந்தையுடன் மனிஷா பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், 2வது குழந்தையை பார்க்க கணவர் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தையை தன்வசம் ஒப்படைக்ககோரி இளம்பெண் உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.