அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் சாமூண்டிஸ்வரி அம்மன் கோயிலில் மிளகாய் சண்டி யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பொய்யாதநல்லூர் கிராமத்தில் சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் பிரத்தியங்கிரா தேவிக்கு ஆவணி மாத அமாவாசையையொட்டி மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.