மேற்கு வங்க சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா நிறைவேறியது.
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில், மம்தா பானர்ஜி புதிய மசோதாவை தாக்கல் செய்தார்.
” அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா 2024″ என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.