மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறுபவர்களுக்கு மத்திய அரசின் நிதி கொடுக்க வேண்டிய அவசியமில்லையே என பாஜக மாநில பொது செயலாளரும், பாஜக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை அதிமுக விமர்சனம் செய்வதை நிறுத்தினால் அதிமுகவை பாஜக விமர்சனம் செய்யாது என தெரிவித்தார்.
கொள்கையை விட்டு கொடுத்து நிதி வாங்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார். மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத போது மாநில அரசுக்கு நிதி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
“மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என திமுக அரசு பேச்சுக்காக சொல்கிறது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு கூட மத்திய அரசு நிதி கொடுத்துள்ளதாகவும், மாநிலத்திற்கு 32% நிதி அளிக்கப்பட்ட நிலையில், 42% ஆக உயர்த்தியது பாஜக தான் என்றும் இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.