முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை வரும் 5-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.