புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் பிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் செல்கிறார்.
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு நேற்று சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவானில், அவரை பட்டத்து இளவரசரும். மூத்த அமைச்சருமான ஹாஜி அல் – முஹ்தாதி பில்லா வரவேற்றார். புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர். , இன்று புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். இதனைதொடர்ந்து சிங்கப்பூருக்கு பிரதமர் செல்கிறார்.