கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 6 ஆயிரத்து 224 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை தமிழகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
குரூப்-4 தேர்வின் முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.