சமூகத்தில் பெண்கள் மீதான பார்வையில் மாற்றம் தேவை என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்ட மேலவை நூற்றாண்டையொட்டி, அவையில் உரையாற்றிய அவர், வீரமாதா ஜிஜாபாய், சாவித்ரிபாய் பூலே என வீர மங்கைகளின் புண்ணிய பூமியாக மகாராஷ்டிரா திகழ்வதாக புகழாரம் சூட்டினார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரதீபா பாட்டீல் நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக உயரந்ததை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, சமூகத்தில் பெண்களின் மீதான பார்வையையும் புரிதலையும் மாற்றுவது அனைவரது பொறுப்பு என கேட்டுக்கொண்டார்.