அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் அரசு திணறுகிறது.
ஹிமாசல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியது, இலவச திட்டங்கள், வணிக நிறுவனங்களுக்கான மானியம் உள்ளிட்ட காரணங்களால், ஹிமாசல பிரதேச அரசு நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டில் அம்மாநில அரசின் கடன்சுமை 76 ஆயிரத்து 651 கோடி ரூபாயை எட்டியது. நிகழாண்டில் நிலைமை கையை மீறி சென்றதால், இரண்டு லட்சத்து 15 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாமல் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் அரசு திணறுகிறது.
90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், அவர்களும் அவதியடைந்து வருகின்றனர்.