சேலத்தில், அரசு பேருந்தில் பெண்ணின் தங்க செயினை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அல்லிகுட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா, ஓமலூரில் இருந்து சேலம் டவுனுக்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
பேருந்தில் இருந்த பெண் ஒருவர், கூட்டத்தை பயன்படுத்தி பவித்ரா அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முற்பட்டுள்ளார். இதையறிந்து பவித்ரா கூச்சலிடவே, பொதுமக்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.