திருவொற்றியூர் அருகே பட்டா வழங்குவதில் குளறுபடி எனக்கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
சென்னை திருவொற்றியூர் வெள்ளையான் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, பட்டா வழங்குவதில் குளறுபடி உள்ளதாக கூறி அமைச்சர் உதயநிதியுடன் அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.