கோவையில் பழுதான அரசுப் பேருந்தில் பயணிகளை அழைத்துசென்ற விவகாரத்தில் கிளை மேலாளார், உதவிபொறியாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிங்காநல்லூர் – குரும்பபாளையம் இடையே 110 எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இருதினங்களுக்கு முன்பு இந்த பேருந்தில் விஷ்ணு என்பவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது, பேருந்தின் சக்கரங்கள் சரியாக உள்ளதா என கேள்வி எழுப்பிய விஷ்ணுவுக்கு நடந்துநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்த விஷ்ண தமது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், ஒண்டிப்புதூர் கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோவை கோட்ட பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.