ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இளைஞரை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் மீது கஞ்சா கடத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் இருந்துள்ளன.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்து 750 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வழக்கில் ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சேலம் மாநகராட்சி ஆணையர் பரிந்துரையின்பேரில் ஜீவானந்தத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் பிரவீன்குமார் உத்தரவிட்டார்.