மத்தியபிரதேசத்தில் புகார் மனுக்களை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்ட நபரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிமுச் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய பொதுக் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது புகார் மனுக்களை உடலில் அணிந்தவாறு அங்கு வந்த முகேஷ் பிரஜாபதி என்பவர், தமது பிரச்னை குறித்து பல ஆண்டுகளாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறி தரையில் உருண்டவாறு சென்றார்.