பாறைகளை வெடிவைத்து எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுவதால் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர் சங்க தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், கீரனூர் அடுத்த ராசாம்பாளையம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராசமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 22 காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற கோரியும், உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.