சேலம் அருகே, பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
வீராணம் அருகேயுள்ள பருத்திக்காடு என்ற பகுதியில், ஜெயக்குமார் என்பவர், பட்டாசு குடோன் வைத்துள்ளார்.
அங்கு பட்டாசு தயாரிப்பதற்காக இன்று காலை லாரியில் எடுத்துவரப்பட்ட கரித்தூள் உள்ளிட்ட மூலப்பொருட்களை, குடோனுக்குள் தொழிலாளர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயராமன், கார்த்தி, சசி ஆகிய 3 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதில், ஜெயராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தீ விபத்து தொடர்பாக, பட்டாசு குடோன் உரிமையாளர் ஜெயக்குமாரை பிடித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.